முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Friday, July 31, 2009

அமெரிக்காவுக்கு கதவுகள் திறந்து விட்ட கொலம்பியாவுடனான உறவு குறித்து வெனிசுலா அதிபர் சாவேஸ் மறுஆய்வு


21.07.2009 செவ்வாய் அன்று வெனிசுலா மற்றும் கொலம்பியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே நடக்கவிருந்த உயர் மட்டக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது*.


வெனிசுலாவின் அண்டை நாடு கொலம்பியா. 2008 - 2009 ஆண்டுகளில் கொலம்பியாவில் இயங்கிய புரட்சிப் படையை அழிக்க அமெரிக்க உதவியை நாடியது கொலம்பியா. அமெரிக்கத் துணையுடன் கொலம்பியா புரட்சிப் படை முகாம்களை தாக்கிய போது சாவேஸ் அதனை எதிர்த்தார். சமரசம் செய்யவும் முயற்சித்தார்.


கொலம்பியா சமீபத்தில் அதன் எல்லையில் ஐந்து ராணுவ தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளித்தது*. இதனால் கொலம்பியாவுடனான உறவுகள் மறு ஆய்வு நடத்தப்படும் என வெனிசுலா அதிபர் சாவேஸ் செவ்வாய் அன்று அறிவித்தார்.


அமெரிக்காவுக்கு அனுமதி அளித்த கொலம்பியாவின் முடிவு வெனிசுலாவுக்கு ஆபத்தை அளிக்கக் கூடும் என்பதால் அதனுடனான உறவுகள் மற்றும் தூதரகத் தொடர்புகள் பற்றி மறு ஆய்வு செய்யுமாறு தனது வெளியுறவுத் துறை அமைச்சர் நிகோலஸ் மது ரோவுக்கு அதிபர் சாவேஸ் உத்திரவிட்டுள்ளார்.


தனது நாட்டைத் தொடர்ந்து தாக்கி வரும், புதிய தாக்குதல்களுக்குத் தயாராகும், பல அரசுகளைக் கவிழ்த்த ‍‍‍ஹோண்டுராசில் கலகம் ஏற்படுத்திய அமெரிக்காவுக்கு கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக சாவேஸ் குற்றம் சாட்டினார். கொலம்பியாவின் ஆதரவு மூலம் அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

லத்தின் அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கொலம்பியாவின் அமெரிக்க உறவை கண்டித்துள்ளனர்.


போதைப் பொருள்கள் கடத்தல்களைத் தடுப்பது என்ற போர்வையில் அமெரிக்கா காலூன்றப் பார்ப்பதாக பொலிவிய அதிபர் ஈவோ மொரேலஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கலகங்களை உருவாக்கி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ‍ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில் பிரச்சனை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

* Janasakthi 23 July 2009 Page 7

No comments:

Post a Comment